ஜல்லிக்கட்டில் களமிறங்கும் காளைகளுக்கு இறுதிக்கட்ட பயிற்சி

0 823
புகழ்பெற்ற அலங்கா நல்லூரில் வருகிற 16 ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் களமிறங்கும் காளைகளுக்கு இறுதிக்கட்ட பயிற்சி அளிக்கும் பணி, முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

புகழ்பெற்ற அலங்கா நல்லூரில் வருகிற 16 ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் களமிறங்கும் காளைகளுக்கு இறுதிக்கட்ட பயிற்சி அளிக்கும் பணி, முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தாண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி, வருகிற 16 ஆம் தேதி, நடைபெறுகிறது. புகழ் பெற்ற அலங்காநல்லூர் வாடி வாசலுக்கு கொண்டு வரும் காளைகளை அடக்க காளையர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.

மற்றொரு புறம் களமிறங்கும் காளைகளுக்கு,மண் முட்டும் பயிற்சி , நீச்சல் பயிற்சி - பாய்ச்சல் பயிற்சி , திறந்த வெளியில் ஓடவிடும் பயிற்சி என பல்வேறு அம்சபயிற்சிகள் , பயிற்சியாளர்கள் மூலம் அளிக்கப்பட்டது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால், காளைகளுக்கு இறுதிக்கட்ட பயிற்சி அளிக்கும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.

இந்தப் பயிற்சிகளை காளைகளின் உரிமையாளர்கள் நேரடியாக இல்லாமல் வெளி ஆட்களின் மூலம் வழங்குகின்றனர். இதனால் மாடுபிடி வீரர்களை பார்க்கும் போதெல்லாம் காளைகள் சிலிர்தெழுந்து பாய வாய்ப்பிருப்பதாக உரிமையாளர்கள் கூறுகிறார்கள்.

அலங்காநல்லூரின் தாய் கிராமமான வலசை கிராமத்தின் காளை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மூன்றாவது காளையாக இறக்கப்படும். முதல் மற்றும் இரண்டாவது காளையாக ஊர்ப் பொதுக் காளையும் , அரியமலை கருப்பசாமி கோயில் காளையும் அவிழ்க்கப்படும்.

வலசை கிராமத்தில் மட்டும் 40 க்கும் மேற்பட்ட காளைகள் வளர்க்கப்படுகின்றன. அலங்காநல்லூர் மட்டுமல்லாது, தமிழகத்தில் எங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடந்தாலும், இக்கிராமத்தின் காளைகள் பங்கேற்று, ஊரின் பெருமையை நிலை நாட்டி வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments