நீட் தேர்வு மதிப்பெண் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரிய மாணவரை மருத்துவக் கல்லூரியில் சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வு மதிப்பெண் தொடர்பாக விசாரணை கோரிய மாணவரை மருத்துவக் கல்லூரியில் சேர்த்துக்கொள்ளச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த மனோஜ் என்பவர் நீட் தேர்வில் 594 மதிப்பெண் எடுத்ததாகத் தனது விடைத்தாளில் பதிவாகி இருந்ததாகவும், 248 மதிப்பெண் எனப் பதிவேற்றியுள்ளதாகவும் கூறி இரு ஸ்கிரீன் ஷாட்களுடன் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாணவரின் ஸ்கிரீன் ஷாட் திரிக்கப்பட்டது என்றும், அவர் 248 மதிப்பெண் மட்டுமே பெற்றுள்ளதாகவும் தேசியத் தேர்வு முகமை தெரிவித்தது.
ஆனால் விசாரணை முடிவில் தன் மீது தவறு இருந்தால் சட்டப்படியான விளைவுகளைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக மாணவர் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, நிபந்தனைகளுடன் மாணவரை மருத்துவக் கல்லூரியில் சேர்த்துக்கொள்ள நீதிபதி உத்தரவிட்டார்.
Comments