தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்குமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்குமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த மையத்தின் இயக்குநர் புவியரசன், இலங்கை மற்றும் குமரிக்கடலை ஒட்டிய வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்த இரு நாட்களுக்கு பல மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றார்.
13 ஆம் தேதி அன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழையும், தென் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடுமென அவர் கூறினார்.
14, 15 ஆம் தேதிகளில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார். மீனவர்கள் அடுத்த இரு நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாமென அவர் தெரிவித்தார்.
Comments