இந்த நிமிடம் வரை அதிமுக கூட்டணியில் தேமுதிக உள்ளது - பிரேமலதா விஜயகாந்த்

0 4734

அதிமுக கூட்டணியில்தான் தேமுதிக இந்த நிமிடம் வரை இருப்பதாகவும், கூட்டணி அறிவிக்கும் முதலமைச்சர் வேட்பாளரை தேமுதிக ஏற்கும் என்றும் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமையகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்றும், ஆதலால் கட்சி சின்னத்தில்தான் தேமுதிக தேர்தலில் போட்டியிடும் என்றும் கூறினார்.

தேமுதிகவில் இருந்து நிர்வாகிகள் விலகியது குறித்த கேள்விக்கு, கட்சியில் இருந்த குப்பைகள் கழிந்து விட்டதாகவும், அதற்கு உதவிய பிற அரசியல் கட்சிகளுக்கு நன்றி என்றும் பதிலளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments