தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை, முதலமைச்சர் ஜன.16-ல் மதுரையில் தொடங்கி வைக்கிறார்

0 2074
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை, முதலமைச்சர் ஜன.16-ல் மதுரையில் தொடங்கி வைக்கிறார்

மிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை மதுரையில் வருகிற 16ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க இருக்கிறார்.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி 16ம் தேதி தொடங்கி வைக்க இருக்கிறார். இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் அத்திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கவுள்ளார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெறவுள்ள உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டை வருகிற 16ம் தேதி தொடங்கி வைக்க முதலமைச்சர் செல்ல இருக்கிறார்.

அப்போது அவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில்  நடைபெறும் நிகழ்ச்சியில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை  தொடங்கி வைக்க இருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments