விக்ரம் நடிப்பில் உருவான கோப்ரா படத்தின் டீசர் வெளியீடு

0 4002
விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா படத்தின் டீசரை அந்த படக்குழு வெளியிட்டுள்ளது.

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா படத்தின் டீசரை அந்த படக்குழு வெளியிட்டுள்ளது.

டீமான்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அஜய் ஞானமுத்து கோப்ரா படத்தை இயக்கியுள்ளார்.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட படப்பிடிப்பு டிசம்பரில் மீண்டும் தொடங்கியது. அந்தப் படத்தில் விக்ரம், ஸ்ரீநிதி செட்டி, கே.எஸ் ரவிக்குமார், மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

விக்ரமை தேடும் துருக்கியை சேர்ந்த இன்டர்போல் அதிகாரி வேடத்தில் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் இர்பான் பதான் நடித்துள்ளார்.

கணிதவியல் நிபுணராக வரும் விக்ரம், தனது கணித திறனை கொண்டு குற்றங்கள் புரிவது போல திரைக்கதை வடிவமைக்கப்பட்டு உள்ளது. முற்றிலும் ஆக்சன் த்ரில்லர் படமான கோப்ராவுக்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments