சபரிமலை பேட்டை துள்ளல் நிகழ்ச்சியில் 50 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

0 2483
சபரிமலையில் கொரோனா பரவல் காரணமாக பேட்டை துள்ளல் நிகழ்ச்சியில் 50 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் கொரோனா பரவல் காரணமாக பேட்டை துள்ளல் நிகழ்ச்சியில் 50 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்போது மகர விளக்கு பூஜை நடந்து வருகிறது. மகரவிளக்கு பூஜைக்கு முன்னர் சபரிமலையில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

ஆனால் கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு பேட்டை துள்ளல் நிகழ்ச்சிக்கு கோவில் நிர்வாகம் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

பேட்டை துள்ளல் நிகழ்ச்சியில் 50 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அவர்களும் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments