பேஸ்புக் நண்பரை சந்திக்க டாக்ஸி டிரைவரிடத்தில் உதவி கேட்ட சிறுமி!-விபரீதத்தில் முடிந்த அறியாமை

0 42500

கோவையில் 17 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, அங்குள்ள பள்ளியில் 11 - ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவிக்கு பேஸ்புக் மூலம் கடலூரை சேர்ந்த 27 வயதான ஏழுமலை என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் செல்போனில் பேசிப் பழகி வந்துள்ளனர். பிறகு, திருச்சியில் இருவரும் சந்திக்க முடிவு செய்துள்ளனர்.

தன் ஃபேஸ்புக் நண்பரை திருச்சி சென்று சந்திக்க மாணவி தனக்கு ஏற்கெனவே பழக்கமான கால் டாக்ஸி டிரைவர் சண்முகத்திடம் உதவி கேட்டுள்ளார். இதை சாக்காக வைத்துக் கொண்ட சண்முகம் ,மாணவியை மிரட்டி ஊட்டிக்கு அழைத்து சென்று ஹோட்டலில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பிறகு, மூன்று நாள்கள் கழித்து மாணவியை திருச்சிக்கு அழைத்து சென்று ஏழுமலையிடம் ஒப்படைத்துள்ளார்.

திருச்சியில் அறை எடுத்த ஏழுமலை மாணவியை 3 நாள்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், வேளாங்கண்ணிக்கு அழைத்து சென்று அங்கு தங்கியுள்ளனர். இந்த நிலையில், மாணவியின் பெற்றோர் தங்கள் மகள் காணாமல் போனது குறித்து செல்வபுரம் போலீசில் புகார் அளித்தனர்.

மாணவியின் செல்போன் டவரை வைத்து வேளாங்கண்ணியில் இருப்பதை கண்டுபிடித்தனர். உடனடியாக , வேளாங்கண்ணி போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, ஏழுமலையிடமிருந்து மாணவி மீட்கப்பட்டார். கால் டாக்ஸி ஒட்டுநர் சண்முகம், ஏழுமலை ஆகியோர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments