10, 12 வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை பொங்கலுக்குப் பிறகு திறக்கலாமா? வரும் 8ஆம் தேதி வரை பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு
10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை பொங்கலுக்குப் பிறகு திறக்கலாமா என்பது பெற்றோர்களிடம் வரும் 8ஆம் தேதி வரை கருத்துக் கேட்கப்படுகிறது.
இந்த கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளை, பள்ளிகள் செய்திருக்கின்றனவா என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் இன்று ஆய்வு நடத்தப்பட்டது.
சென்னையில் எம்ஜிஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் தலைமையிலான அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது.
Comments