இந்தியா, பாகிஸ்தானின் அணு நிலையங்கள் குறித்த பட்டியல் பரிமாற்றம்

இந்தியா, பாகிஸ்தானின் அணு நிலையங்கள் குறித்த பட்டியல் பரிமாற்றம்
இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களிடமுள்ள அணு நிலையங்கள் குறித்த பட்டியலை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டுள்ளன.
அணு நிலையங்கள் தொடர்பாக கடந்த 1988ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி இந்தியா, பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி ஒருவரது அணு நிலையங்களை மற்ற நாடு தாக்கக் கூடாது என தீர்மானிக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி அணு நிலையங்கள் தொடர்பான பட்டியலை 1992 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ம்தேதி இரு நாடுகளும் பரிமாறி கொண்டு வருகின்றன. இதேபோல் இருநாடுகளும் பட்டியலை இன்று பரிமாறிக் கொண்டன.
Comments