”கொரோனா தடுப்பூசி ஒத்திகை வெற்றிகரமாக நடந்தது” மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

0 1096
”கொரோனா தடுப்பூசி ஒத்திகை வெற்றிகரமாக நடந்தது” மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதையொட்டி அசாம், ஆந்திரா, பஞ்சாப், குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் நேற்றும் இன்றும் ஒத்திகை நடத்தப்பட்டது.

கொரோனா தடுப்பூசியை பாதுகாப்பாக கொண்டு செல்லுதல், தடுப்பூசி போடப்படும் இடத்தில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஒத்திகை நடத்தப்பட்டது. இந்த ஒத்தகை வெற்றிகரமாக இருந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments