சேலம் : மூன்றாவதும் பெண்ணாகப் பிறந்த குழந்தை... ஆட்டோ வாங்க ரூ. 1.15 லட்சத்துக்கு பெற்ற குழந்தையை விற்ற தந்தை

சேலத்தில் ஆட்டோ வாங்க தந்தையால் ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட குழந்தையை போலீசார் மீட்டனர்.
அன்னதானப்பட்டியைச் சேர்ந்த விஜய் - சத்யா தம்பதிக்கு 2 மகள்கள் உள்ள நிலையில், கடந்த மாதம் ஒன்றாம் தேதி மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதனால் குழந்தையை விற்று ஆட்டோ வாங்கலாம் என கூறிய விஜய், சத்யா ஒப்புக்கொள்ளாத நிலையில், கடந்த மாதம் 14ஆம் தேதி குழந்தையை ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்று ஆட்டோ வாங்கி தலைமறைவானன்.
புகாரின் பேரில் விசாரித்த அன்னதானப்பட்டி போலீசார், தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் குழந்தையை மீட்டனர். குழந்தையை 4 லட்ச ரூபாய்க்கு வாங்கிய சுந்தர்ராஜனையும் இடைத்தரகர்களான 4 பெண்களையும் கைது செய்தனர். குழந்தையின் தந்தை விஜயை தேடி வருகின்றனர்.
Comments