டிராக்டர் தலைக்குப்புற கவிழ்ந்து 2 இளைஞர்கள் உயிரிழப்பு

0 2025
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே நிலை தடுமாறி டிராக்டர் தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே நிலை தடுமாறி டிராக்டர் தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நீலமங்கலம் கிராமத்தை சேர்ந்த நான்கு இளைஞர்கள் விளை நிலத்தில் உழவு வேலையை முடித்துவிட்டு டிராக்டரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது, ஏரிக்கரை பகுதியில், நிலைத்தடுமாறி டிராக்டர் தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில், இரும்புலிச்சேரி பகுதியை சேர்ந்த மகாவிஷ்ணு, நவீன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த டிஷா, ஹரி ஆகியோர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments