தனியார் கல்லூரி விடுதியில் மாணவர்களுக்கிடையே மோதல்- கொடூரமாக கொல்லப்பட்ட மாணவன்

சென்னை அருகே நள்ளிரவில் தனியார் கல்லூரி விடுதி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் வடமாநில மாணவர் ஒருவர் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்.
சென்னை அருகே நள்ளிரவில் தனியார் கல்லூரி விடுதி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் வடமாநில மாணவர் ஒருவர் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்.
ஜமீன் கொரட்டூரில் “இண்டெர்நேஷனல் மாரிடைம் அகாடமி” கல்லூரி இயங்கி வருகிறது. இங்குள்ள விடுதியில் நள்ளிரவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களில் சிலர் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், கிறிஸ்துமஸ் கேக் வெட்டும்போது மூன்றாமாண்டு மாணவர்களுக்கும் நான்காமாண்டு மாணவர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் மர நாற்காலியின் கால் பகுதியை உடைத்து கழுத்துப் பகுதியில் குத்தியதில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆதித்ய ஷர்மா என்ற மாணவர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments