இன்ஜினியரிங் நடப்பு செமஸ்டருக்கான தேர்வு தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

இன்ஜினியரிங் நடப்பு செமஸ்டருக்கான தேர்வு தேதிகளை, அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
இன்ஜினியரிங் நடப்பு செமஸ்டருக்கான தேர்வு தேதிகளை, அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது. இதன்படி, வருகிற ஜனவரியில், எழுத்துத் தேர்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனிலேயே தேர்வு நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களை கண்காணிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், 20 மாணவருக்கு ஒரு பேராசிரியர் என்ற விகிதத்தில், கண்காணிப்பு பணி நடைபெறும் என்றும், அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கடந்த 17ஆம் தேதி முதல், இன்ஜினியரிங் படிப்புகளுக்கான, செய்முறைத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Comments