கர்நாடகாவில் இன்று முதல் ஜனவரி 2ம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல்

கர்நாடகாவில் இன்று முதல் ஜனவரி 2ம் தேதி வரை இரவுநேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இன்று முதல் ஜனவரி 2ம் தேதி வரை இரவுநேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் பரவியுள்ள புதிய வகை கொரோனா வைரசால், உலகெங்கும் புதிய பீதி பரவியுள்ளது. முன்னெச்சரிக்கையாக மகாராஷ்டிரா மாநிலம் இரவு ஊரடங்கை அமல்படுத்தியது.
இதையடுத்து தற்போது 2ஆவது மாநிலமாக கர்நாடகாவும் அமல்படுத்தியுள்ளது.
அந்த மாநில முதலமைச்சர் எடியூரப்பா வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றிலிருந்து ஜனவரி 2ம் தேதி வரை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தபடுவதாகவும், இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
Comments