பிரிட்டனில் பரவத் துவங்கிய வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ், இத்தாலிக்கும் பரவியது..!

0 5976
கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளது என பிரிட்டன் வர்ணித்துள்ள வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் தொற்று, இத்தாலிக்கும் பரவியுள்ளது.

கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளது என பிரிட்டன் வர்ணித்துள்ள வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் தொற்று, இத்தாலிக்கும் பரவியுள்ளது.

இந்த வார துவக்கத்தில் பிரிட்டனில் இருந்து ரோம் நகரில் உள்ள பியூமிசினோ(Fiumicino) விமான நிலையத்திற்கு திரும்பிய 2 பேரில் ஒரு நபருக்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளதாக இத்தாலி சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அவர் தனிமைப்படுத்தப்பட்டு அவரது உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோமில் உள்ள சீலோராணுவ மருத்துவமனை ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் புதிய வீரியமிக்க கொரோனா வைரசின் மரபியல் வடிவம் உறுதி செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments