அதிமுக - பாஜக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளரை பாஜக தலைமைதான் முடிவு செய்யும்” - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்

0 3392

அதிமுக - பாஜக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை தங்களது தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டம் காரைக்குறிச்சியில் “விவசாயிகளின் நண்பன் மோடி” என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்ற எல்.முருகன், நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

முன்னதாக கூட்டத்துக்கு வருகை தந்த எல்.முருகனுக்கு கும்பகோணம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தா. பழூர் என்ற இடத்தில் டிராக்டர் பேரணி வரவேற்பு கொடுக்க கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

அதற்காக 50க்கும் மேற்பட்ட டிராக்டர்களை சாலையோரமாக நிறுத்தி வைத்திருந்தனர். அப்போது அங்கு வந்த எல்.முருகன், ரிவர்ஸ் கியரில் இருந்தது தெரியாமல் டிராக்டர் ஒன்றை இயக்க முற்பட்டார். டிராக்டர் பின்னால் நகரவே அங்கு நின்றிருந்தவர்கள் அலறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments