நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்ட 344 மாணவர்கள் மீட்பு; பெற்றோர்கள் ஆரத்தழுவி ஆனந்தக் கண்ணீர்..!

0 2094
நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்ட 344 மாணவர்கள் மீட்பு; பெற்றோர்கள் ஆரத்தழுவி ஆனந்தக் கண்ணீர்..!

நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்ட 344 மாணவர்கள் விடுவிக்கப்பட்டதையடுத்து நீண்ட வரிசையில் காத்திருந்த பெற்றோர் தங்கள் குழந்தைகளைக் கண்டதும் ஆரத்தழுவி ஆனந்தக் கண்ணீர் சொரிந்த காட்சி காண்போரை நெகிழ வைத்தது.

கடந்த 11ம் தேதி இந்தக் குழந்தைகள் தங்கள் பள்ளியில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு காட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தனர். உளவுத்துறை தகவல்களை அடுத்து நான்கு மாநிலங்களை தாண்டிச் சென்று குழந்தைகளை பாதுகாப்பு படையினர் மீட்டு வந்தனர்.

உண்ண உணவுகூட இல்லாமல் காட்டில் விடப்பட்ட தாங்கள் இலைகளைத் தின்று இரண்டு நாட்கள் பசியாற்றியதாக மீட்கப்பட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments