லாரி சக்கரத்தில் சிக்கி கட்டிட வடிமைப்பாளர் உயிரிழப்பு : 4 நாட்களில் முதல் திருமண ஆண்டை கொண்டாட இருந்த நிலையில் நேர்ந்த சோகம்

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், தெரு சண்டையால் கட்டிட வடிமைப்பாளர் லாரியில் சிக்கி பலி
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், தெரு சண்டையால் கட்டிட வடிமைப்பாளர் லாரியில் சிக்கி பலி
32 வயதான சித்தார்த் சோனி, தனது காரில் அலுவலகம் சென்ற போது, எதிர்பாரா விதமாக விகேஷ் யாதவின் இருசக்கர வாகனம் மீது மோதி விட்டார்.
அதற்காக, காரில் இருந்து இறங்கி சித்தார்த் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால் கோபமடைந்த விகாஷ், தாக்கியதுடன், பிடித்து தள்ளியதில் அந்த வழியாக வந்த லாரி சக்கரத்தில் சிக்கி சித்தார்த் பரிதாபமாக இறந்தார்.
இன்னும் 4 தினங்களில் முதல் திருமண ஆண்டு நிறைவை சித்தார்த் கொண்டாட இருந்த நிலையில் இந்த சோகம் அரங்கேறி உள்ளது.
Comments