கர்நாடகத்தில் பொது இடங்களில் ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குத் தடை
கர்நாடகத்தில் பொது இடங்களில் ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குத் தடை
கர்நாடக அரசு கொரோனா பரவலைத் தடுக்கப் பொது இடங்களில் ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதித்துள்ளது.
கர்நாடகத்தில் கிளப்கள், பப்கள், உணவகங்கள், விடுதிகளில் ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு டிசம்பர் 30 முதல் 4 நாட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் அவற்றின் வழக்கமான செயல்பாடுகளுக்குத் தடையில்லை. தேவாலயங்களில் சமூக விலகலின்றி அதிகம் பேர் கூடாமல் பார்த்துக்கொள்ளும்படியும் அறிவுறுத்தியுள்ளது.
Comments