இருசக்கர வாகனங்களின் விலையை ஜனவரி முதல் உயர்த்துவதாக ஹீரோ மோட்டார் அறிவிப்பு

ஹீரோ மோட்டார் நிறுவனம் ஜனவரி முதல் இருசக்கர வாகனங்களின் விலையை ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இருசக்கர வாகனத் தயாரிப்புக்கான உருக்கு, அலுமினியம், பிளாஸ்டிக் ஆகியவற்றின் விலை அதிகரிப்பால் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதாக ஹீரோ மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் அனைத்து இருசக்கர வாகனங்களின் விலையையும் உயர்த்த உள்ளதாகவும், அதிகப்பட்சமாக ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் வரை உயர்த்தப்போவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த விலை உயர்வு ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஏற்கெனவே மகிந்திரா நிறுவனம் தனது அனைத்துவகை வாகனங்களுக்கும் விலையை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது.
Comments