ஃபைசர் கொரோனா தடுப்பூசி போட்ட ஒருவருக்கு, சில நிமிடங்களிலேயே தீவிர அலர்ஜி - அமெரிக்க சுகாதாரத்துறை

0 2644

அமெரிக்காவில் சுகாதாரப் பணியாளர் ஒருவருக்கு பைசர் கொரோனா தடுப்பூசி போட்ட சில நிமிடங்களிலேயே தீவிர அலர்ஜி ஏற்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் பிரிட்டனில் இதேபோல 2 பேருக்கு தீவிர அலர்ஜி ஏற்பட்டதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட உணவு அல்லது மருந்துகளால் ஏற்படும் ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், அமெரிக்காவின் அலாஸ்காவில், பைசர் கொரோனா தடுப்பூசியால்  தீவிர அலர்ஜி ஏற்பட்ட நபர், இதற்கு முன்னர் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர் அல்ல என சிகிச்சை அளித்த மருத்துவமனை தெரிவித்துள்ளது.

தீவிர அலர்ஜி ஏற்பட்டவுடன் அதற்குரிய மருந்து கொடுக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட நபர் நலமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments