முதல் டெஸ்டுக்கு பிறகு நாடு திரும்புவதில் உறுதியாக உள்ளேன் - விராட் கோலி

0 19241

முதல் டெஸ்ட் போட்டிக்கு பின்னர் நாடு திரும்புவதில் உறுதியாய் இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு குழந்தை பிறக்க இருப்பதை கருத்தில் கொண்டு, கோலிக்கு பிசிசிஐ விடுமுறை அளித்துள்ளது.  இதனால் அடிலெய்டில் நடைபெறும் முதல் டெஸ்டுக்கு மட்டும் கோலி கேப்டனாக செயல்படுவார் என்றும், எஞ்சிய 3 போட்டிகளுக்கு ரஹானே கேப்டனாக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்துடன் கோலி பேசிய வீடியோ உரையாடலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில் மனைவி அனுஷ்காவுக்கு முதல் குழந்தை பிறக்க இருக்கும் சிறப்பு தருணத்தை தவறிவிட விரும்பவில்லை எனவும், நாடு திரும்புவதில் உறுதியாய் இருப்பதாகவும் கோலி கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments