இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

0 1276

இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 விசைப்படகுகளுடன் 29 மீனவர்களையும், தூத்துக்குடியைச் சேர்ந்த 6 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர்.

இதையடுத்து, மீனவர்களையும் படகுகளையும் இலங்கை அரசு விடுவிக்கும் வரை தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட ராமேஸ்வரம் மீனவர்கள் முடிவு செய்தனர்.

இதனால் இன்று காலை முதல் சுமார் 800 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments