உலகிலேயே மிகப்பெரிய மின்சார ஸ்கூட்டர் தயாரிக்கும் ஆலையை தமிழகத்தில் அமைக்க உள்ள ஓலா நிறுவனம்

உலகிலேயே மிகப்பெரிய மின்சார ஸ்கூட்டர் தயாரிக்கும் ஆலையை தமிழகத்தில் அமைக்க உள்ளதாக ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அலுவலருமான பாவேஷ் அகர்வால், தமிழகத்தின் ஓசூரில் 2354 கோடி ரூபாய் செலவில் மின்சார ஸ்கூட்டர் தயாரிக்கும் ஆலை அமைக்கப்பட உள்ளது என்றார்.
இதற்காக தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாகவும், இந்த ஆலையில் ஆண்டுக்கு 20 லட்சம் ஸ்கூட்டர்கள் தயாரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
சர்வதேச தொழில் நுட்பத்துடன் அமைக்கப்படும் ஆலையில், சர்வதேச தரத்திற்கு இணையான ஸ்கூட்டர்கள் உருவாக்கப்படும் என்றும், இதன் மூலம் பத்தாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
Comments