மக்களுக்காக ஈகோவை விட்டு விட்டு ரஜினியுடன் இணையத் தயார் -கமல்ஹாசன்

மக்களுக்காக ரஜினியுடன் இணையத் தயார் என்று கமல்ஹாசன் தகவல்
மக்களுக்காக எந்தவிதமான ஈகோவையும் விட்டுக்கொடுத்து ரஜினியுடன் இணைந்து களம் இறங்க தயார் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள அவர், செய்தியாளர்களை சந்தித்தார்.
எம்.ஜி.ஆர் திமுக திலகமோ, அதிமுக திலகமோ அல்ல என்றும் அவர் மக்கள் திலகம் என்பதால் ஏழரை கோடி மக்களும் சொந்தம் கொண்டாடலாம் என்றும் கமல் தெரிவித்தார்.
Comments