நம்புங்க... இது கொடைக்கானல் ஏரிதான்... முடிச்சு கட்டிட்டாங்க!

0 374869

கொடைக்கானல் என்றதுமே நமக்கும் அழகான அந்த மிகப் பெரிய ஏரிதான் நினைவுக்கு வரும். அழகிய அந்த ஏரிதான் தற்போது கூவம் நதி போல மாறி துர்நாற்றம் வீசுவதாக கொடைக்கானல் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லுகின்றனர் . கொடைக்கானல் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்வது சுற்றுலா பயணிகளின் வழக்கம், இந்த நிலையில், நட்சத்திர ஏரியை சுற்றி நீர் தாவரமான பிஸ்டியா வளரத் தொடங்கியுள்ளது. இந்த தாவரம் ஏரி முழுவதும் பரவியதால், நட்சத்திர ஏரி பொழிவு இழந்து காணப்படுகிறது. பிஸ்டியா நீர் தாவரம் வளரும் நீர் நிலைகளில் பிற நீர் தவாரங்களின் வளர்ச்சி பாதிக்கும். தண்ணீரிலும் பிராண வாயு குறைந்து மீன்களும் இறந்து போகும் வாய்ப்பு உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு, இந்த ஏரியை சுற்றிலுமுள்ள ஹோட்டல்களில் கழிவு நீர் இந்த ஏரியில்தான் வந்து கலக்கிறது. இதனால், துர்நாற்றம் ஏற்பட்டு மக்கள் முகம் சுளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஏரியில் ஆங்காங்கே மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி கிடக்கின்றன . நட்சத்திர ஏரியை சுத்தம் செய்வதற்கு பல லட்சம் மதிப்பில் சுத்தம் செய்யும் இயந்திரம் அமைக்கப்பட்டது. ஆனால், முறையான பராமரிப்பு இல்லாமல் பழுதாகிப் போனது. நான்கு வருடங்களுக்கு முன்பு அந்த இயந்திரமே இங்கிருந்து காணாமல் போய் விட்டது. எனவே, நட்சத்திர ஏரியை சுற்றியுள்ள செடி கொடிகள்,நீர் தாவரங்கள்,மதுபாட்டில்கள்,பிளாஸ்டிக் கழிவுகளை உடனடியான அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும் என்வும் கொடைக்கானலின் அடையாளமாக கருதப்படும் இந்த அழகான ஏரியை காப்பாற்ற நகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments