நடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும்-தயாரிப்பாளர் அறிவிப்பு

நடிகர்கள் விஜய், விஜய சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும் என்று தயாரிப்பாளர் அறிவித்துள்ளனர்.
மாஸ்டர் திரைப்படத்தை, ஓ.டி.டி தளமான நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய படத் தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளதாகவும், தகவல் வெளியானது.
இந்நிலையில், படத்தை நேரடியாக தயாரித்த சேவியர் பிரிட்டோவும், அதன் அனைத்து உரிமைகளையும் வாங்கியுள்ள, பட வெளியீட்டு தயாரிப்பாளராக கூறப்படும், செவன் ஸ்கிரின் ஸ்டியோ லலித் குமாரும் இணைந்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட, பிரபல நிறுவனம் தங்களிடம் பேசியது உண்மை தான் என்று ஒப்புக்கொண்டுள்ளனர். இருப்பினும், திரைத்துறை மீட்சிக்கு உதவிடும் வகையிலும், தியேட்டர்களிலேயே, மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments