காஞ்சிபுரம், செங்கல்பட்டில் 403 ஏரிகள் 100 சதவீத கொள்ளளவை எட்டின

0 838
காஞ்சிபுரம், செங்கல்பட்டில் 403 ஏரிகள் 100 சதவீத கொள்ளளவை எட்டின

காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்திலுள்ள 403 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளன.

நிவர் புயல் தாக்கத்தால், கடந்த சில நாட்களாக அங்கு கனமழை பெய்தது. இந்த நிலையில், காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 403 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளன.

335 ஏரிகள் 75% கொள்ளளவையும், 140 ஏரிகள் 50% கொள்ளளவையும் எட்டியுள்ளன. 31 ஏரிகள் 25% கொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments