இந்தியாவில் சிறப்பாக செயல்படும் பெரிய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 3ஆவது ஆண்டாக முதலிடம் - இந்தியா டுடே விருது

0 3239

ந்தியாவில் சிறப்பாக செயல்படும் பெரிய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 3ஆவது ஆண்டாக தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது.

பல்வேறு அரசுத் துறைகளில் செயல்பாடுகளை ஆராய்ந்து, ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் மாநிலங்களை தேர்ந்தெடுத்து இந்தியா டுடே பத்திரிக்கை விருது வழங்குகிறது.

இந்த பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. மொத்தம் 2 ஆயிரம் புள்ளிகளில், தமிழகம் 1263 புள்ளிகளை பெற்றுள்ளது.

1235.1 புள்ளிகளுடன் இமாச்சலப் பிரதேசம் இரண்டாம் இடத்திலும், 1235 புள்ளிகளுடன் பஞ்சாப் மூன்றாமிடத்திலும் உள்ளன. 1211புள்ளிகளுடன் கேரளா நான்காமிடத்தில் உள்ளது. சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களுக்கான விருது டிசம்பர் 5ஆம் வழங்கப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments