கேரள தங்க கடத்தல் வழக்கு: முதலமைச்சரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரை கைது செய்ய சுங்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி

கேரள தங்க கடத்தல் வழக்கு: முதலமைச்சரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரை கைது செய்ய சுங்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி
கேரள தங்க கடத்தல் வழக்கில், முதலமைச்சரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரை கைது செய்ய சுங்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தங்க கடத்தலில் முக்கிய குற்றவாளியான சொப்னா சுரேஷுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த அவரை ஏற்கனவே அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
வரும் 26 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரை கைது செய்ய சுங்கத்துறை மனு தாக்கல் செய்தது.
அதை, கொச்சியில் உள்ள பொருளாதார குற்றங்களுக்கான கூடுதல் தலைமை குற்றவியல் நீதிபதி விசாரித்து அனுமதி வழங்கினார். முன்னதாக விசாரணைக்கு பிறகு குற்றவாளிகள் பட்டியலில் அவரது பெயரை சுங்கத்துறை அதிகாரிகள் சேர்த்தனர்.
Comments