சவுகார்பேட்டை கொலை வழக்கு.. பதுங்கிய மருமகள் கைது..!

0 5008
சென்னையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், ஆக்ராவில் தலைமறைவாக இருந்து ஜெயமாலா உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், ஆக்ராவில் தலைமறைவாக இருந்து ஜெயமாலா உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜெயமாலாவுக்கு, மாமனார் பாலியல் தொல்லை கொடுத்ததால் 3 பேரை கொலை செய்ததாக அவரது அண்ணன் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

சென்னை - சவுகார்பேட்டையில் கடந்த 11 ஆம் தேதி, ராஜஸ்தான் தொழிலதிபர் தலீல்சந்த், அவரது மனைவி புஷ்பா பாய், மகன் ஷீத்தல் குமார் ஆகிய 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் பிடிபட்ட ஷீத்தலின் மனைவி ஜெயமாலாவின் அண்ணன் கைலாஷ், அவனது கூட்டாளிகள் ரபீந்திரநாத் கர் மற்றும் விஜய் உத்தம் ஆகிய மூவரையும் தனிப்படை போலீசார், 10 நாள் காவலில் எடுத்துள்ளனர்.

விடிய - விடிய மூவரிடமும் தனித்தனியாக நடத்தப்பட்ட விசாரணையில், ஜெயமாலாவின் அண்ணன் கைலாஷ், பரபரப்பு வாக்குமூலம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். தனது சகோதரி ஜெயமாலாவை, மாமனார் தலீல் சந்த் மற்றும் உறவினர்கள் பாலியல் சித்ரவதை செய்து வந்ததால், குடும்பத்தை தீர்த்து கட்டியதாக
கைலாஷ் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

கொலைக்கு பயன்படுத்திய கைத்துப்பாக்கி மற்றும் கார், ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரிக்கு சொந்தமானது என்ற தகவலையும் கைலாஷ், பதிவு செய்திருந்தான். எனவே, ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியிடமும் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே, தலைமறைவாக இருந்த ஷீத்தலின் மனைவி ஜெயமாலா,ஆக்ராவில் கைது செய்யப்பட்டார். ஜெயமாலாவுடன் அவரது சகோதரர் விலாஷ் மற்றும் கூட்டாளி ராஜூ ஷின்டே ஆகியோரும் பிடிபட்டனர்.

சவுகார் பேட்டை கொலையில் தொடர்புடைய 6 பேரும் இப்போது கைது செய்யப்பட்டு விட்டனர். ஆக்ராவில் சிக்கிய ஜெயமாலா உள்ளிட்டோரை சென்னைக்கு அழைத்து வர, தனிப்படை போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments