தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்.. இந்தியா புறக்கணிப்பு..!

0 1351
தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்.. இந்தியா புறக்கணிப்பு..!

இந்தியா கடந்த ஆண்டு புறக்கணித்து இருந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில், ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தை சேர்ந்த 15 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

ஆசியான் அமைப்பைச் சேர்ந்த 10 தென்கிழக்கு ஆசிய நாடுகளும், அவற்றுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் உள்ள இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும், சர்வதேச அளவிலான உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதத்தை கொண்டுள்ளன.

இந்த நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தகத்திற்காக ஏற்படுத்தப்பட்டதே பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு.

கடந்த 2012ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஆசியான் மாநாட்டில் 15 உறுப்பு நாடுகள் கையெழுத்திட்டதன் மூலம், இந்த ஒப்பந்தம் இறுதி வடிவம் பெற்றுள்ளது.

முன்னதாக, 26 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின் சில பிரிவுகளால், சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக், இயந்திர உதிரி பாகங்கள், ரசாயனம் உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதி அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக இந்தியா வலியுறுத்தியது.

மேலும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் இருந்து, வேளாண் மற்றும் பால் பொருட்கள் உள்நாட்டு சந்தையில் குவிக்கப்படும் அபாயமும் இருப்பதாக எதிர்ப்பு தெரிவித்து, உள்நாட்டு உற்பத்தியாளர்களின் நலன் கருதி ஒப்பந்தத்தில் இருந்து கடந்தாண்டு இந்தியா வெளியேறியது.

காணொலி காட்சி வாயிலான நேற்றைய கையெழுத்திடுதல் கூட்டத்திலும் இந்தியா பங்கேற்கவில்லை. இந்தியா இந்த வர்த்தக கூட்டமைப்பில் இணைய விரும்பினால், விரும்பும் தேதியில் இணைந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments