எப்படி இருந்த காசிய இப்படி கசக்கிப்புட்டாய்ங்க..! ஆர்ட்டின் விட்டவருக்கு ஆப்பு

0 53323

முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் 150க்கும் மேற்பட்ட பெண்களை மயக்கி, ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட காதல் மன்னன் காசியின் லேப்டாப்பில் அழிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பெண்களின் ஆபாச வீடியோக்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். கைதான புதிதில் மாப்பிள்ளை காளையாக காணப்பட்ட காசி உடல் எடை மெலிந்து நோயாளி போல மாறிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

ஒரு காலத்தில், கையில் மதுப்பாட்டிலுடன் பொதி காளை போல ஊருக்குள் பெண்களை சுற்றி வந்த காசியை பாலியல் புகாரில் காவல்துறையினர் கைது செய்தனர். அவனை வழக்கு விசாரணைக்கு அழைத்து வந்த போது ஏதோ விருந்துக்கு வந்த புது மாப்பிள்ளை போல மிகவும் உற்சாகமாக நீதிமன்றம் வந்தான்..! 

80 பெண்களின் வாழ்க்கையில் விளையாடியதாக காவல்துறை குற்றஞ்சாட்டிய நிலையில் போலீசார் முன்பே நீதிமன்றத்தில் நின்ற சில பெண்களை நோக்கி ஆர்ட்டின் விட்டது இந்த தீராத விளையாட்டு பிள்ளை..!

பணம், செல்வாக்கு இருப்பதால் எப்படியும் தப்பி விடலாம் என்ற நம்பிக்கையில் அவனது செயல்பாடுகள் அமைந்திருந்தது. கூட்டாளிகள் இருவரும் வெளி நாட்டிற்கு சென்று விட்டார்கள். அவனது லேப்டாப்பில் இருந்த வீடியோக்கள் அனைத்தும் டெலிட் செய்யப்பட்டு விட்டதால் காவல்துறையினரால் ஒன்றும் செய்ய இயலாது என்ற நம்பிக்கையில் இருந்துள்ளார்.

குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் காசி மீது சென்னையை சேர்ந்த மாணவி ஒருவர் பலாத்கார புகார் அளித்ததால் ஜெயிலில் இருந்து காசியை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்த சிபிசிஐடி காவல்துறையினர் சிறப்பான கவனிப்புடன் காசியை கசக்கி பிழிந்ததால் கலங்கி போனான் காமுகன் காசி..! போனமுறை ஆர்ட்டின் விட்டு அலப்பறை செய்த காசியை, இந்த முறை நீதிமன்றம் அழைத்து வந்தபோது எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்..! என்பது போல கையில் கட்டபையை கையில் கொடுத்து நடக்க வைத்தனர் காவல்துறையினர்.

சிக்ஸ் பேக்குடன் மாப்பிள்ளை காளையாக இருந்த காசியை சிறை வாழக்கையும் போலீஸ் கவனிப்பும், எலும்பும் தோலுமாக நோயாளி போல உருமாறிவிட்டிருந்தது. காசியின் லேப்டாப்பில் இருந்து அழிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பெண்களின் ஆபாச வீடியோக்களை நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி போலீசார் மீட்டு கைப்பற்றியுள்ளனர். இதில் பெரும்பாலான வீடியோக்களை அந்த பெண்களுக்கு தெரியாமல் படமாக்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவன் நண்பர்களுக்கு வீடியோக்களை அனுப்பி வைத்த ஐடிக்களை ஆய்வு செய்த போது ஆயிரத்திற்கும் அதிகமான வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை அனுப்பி வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் காசியின் மேலும் இரு கூட்டாளிகள் சிக்குவார்கள் என சொல்லப்படுகின்றது.

வீடியோவில் உள்ள சில இளம் பெண்களின் விபரங்களை சேகரித்துள்ள போலீசார் அவர்களை தொடர்பு கொண்டு புகார் பெறுவதற்கான முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.

காசி மீது 6 பாலியல் வழக்குகள் மற்றும் ஒரு கந்து வட்டி வழக்கு என மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் காசி மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

150க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் காசியால் பாதிக்கப்பட்டவர்கள் துணிச்சலுடன் புகார் அளிக்க முன்வரவேண்டும் என்றும் அவர்களது பெயர் விவரங்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்படும் எனவும் தெரிவித்த சிபிசிஐடி காவல்துறையினர் இந்த வழக்கில் 20 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஜாமீன் இருக்கு தப்பி விடலாம் என்று பெண்களை ஏமாற்ற துணியும் காமுகர்களுக்கு, அதிரடி நடவடிக்கையின் மூலம் சட்டமும் போலீஸ் காவலும் இருக்கு என்று உச்சந்தலையில் உறைப்பது போல சொல்லியுள்ளனர் சிபிசிஐடி போலீசார்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments