மீண்டும் முதலமைச்சர் ஆவாரா நிதிஷ்குமார்?

0 3164
மீண்டும் முதலமைச்சர் ஆவாரா நிதிஷ்குமார்?

பீகார் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் பாஜக- ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், நிதிஷ்குமார் நான்காவது முறையாகத் தொடர்ந்து முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார்.

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் 74 இடங்களில் பாஜகவும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

தேர்தல் வெற்றியை பாஜக வெகுவாகக் கொண்டாடி வருகிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சரகள் பலரும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதர்வளித்ததற்கு நன்றி என கூட்டணி வெற்றியாக முன்னிறுத்தி வருகின்றனர்.

இது பிரதமர் மோடியின் தலைமையிலான அரசுக்கு கிடைத்த வெற்றி என்றும் மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தேர்தலுக்கு முன்னதாக நிதிஷ்குமார் தான் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், முடிவுகள் வெளியான பிறகு அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள பாஜக, நிதிஷ்குமார் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என இதுவரை முன்மொழியவில்லை. இருப்பினும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிதிஷ்குமார் முதலமைச்சராக நீடிப்பார் என பாஜக மாநில தலைவரான சஞ்சய் ஜெய்ஷ்வால் தெரிவித்துள்ளார்.

இதனால், பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏ.க்கள் கூட்டங்களில் நடக்கப் போவது என்ன என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதன் பின்னரே, தொடர்ந்து நான்காவது முறையாகவும், பீகாரில் 7வது முறையாகவும் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவியேற்பாரா என்பது தெரிய வரும் என கூறப்படுகிறது. 73 இடங்களை கைப்பற்றியுள்ள பாஜகவும், முதலமைச்சர் பதவிக்கு முனைப்பு காட்டலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments