செய்தியாளரின் கேள்வியால் கோபம் அடைந்த எல்.முருகன்... முதலமைச்சர் யார் என கை காட்டும் அளவிற்கு பாஜக வளர்ந்துவிட்டதா... எல்.முருகன் பதில்

0 15062
செய்தியாளரின் கேள்வியால் கோபம் அடைந்த எல்.முருகன்... முதலமைச்சர் யார் என கை காட்டும் அளவிற்கு பாஜக வளர்ந்துவிட்டதா... எல்.முருகன் பதில்

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர் சந்திப்பின் போது ஒரு செய்தியாளர் எழுப்பிய கேள்வியால் கோபம் அடைந்தார்.

செங்கல்பட்டில் இருந்து வேல் யாத்திரை செல்ல சென்னை கோயம்பேட்டில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்பட்ட எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நேற்று வேல் யாத்திரையால் ஆம்புலன்ஸ் ஒன்று சிக்கிக் கொண்டதாக புகார் எழுந்தது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, என்ன வேண்டுமானாலும் கேள்வி கேட்பீர்களா என்று அவர் கோபமடைந்தார்.

முதலமைச்சர் யார் என கை காட்டும் அளவிற்கு தமிழகத்தில் பாஜக வளர்ந்துவிட்டதா என செய்தியாளர்கள் கேட்டபோது, அதை தங்களுடன் வந்து நேரில் பார்க்குமாறு பதிலளித்துவிட்டு, செய்தியாளர் சந்திப்பை முடித்துக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments