ஒடிசா, மேற்குவங்கத்தில் தீபாவளி பட்டாசு விற்க, வெடிக்க தடை

0 2331
ஒடிசா, மேற்குவங்கத்தில் தீபாவளி பட்டாசு விற்க, வெடிக்க தடை

ராஜஸ்தான் மாநிலத்தை தொடர்ந்து, ஒடிசா மற்றும் மேற்குவங்க அரசுகளும் தீபாவளி பட்டாசு விற்பனைக்கு தடை விதித்துள்ளன.

கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும், குளிர்காலத்தை கருத்தில் கொண்டு வரும் 10 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை பட்டாசு விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படுவதாக ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது.

அதே போன்று மேற்குவங்கத்திலும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசை அதிகரிக்க செய்வதுடன் கொரோனா நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், காளி பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுவதாக மம்தா பானர்ஜி அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments