செம்மரம் வெட்டிக் கடத்தி வந்த கார்கள் டிப்பர் லாரி மீது மோதித் தீ விபத்து - 4 பேர் பலி

0 864
செம்மரம் வெட்டிக் கடத்தி வந்த கார்கள் டிப்பர் லாரி மீது மோதித் தீ விபத்து - 4 பேர் பலி

ஆந்திர மாநிலம் கடப்பாவில் போலீசார் துரத்திச் சென்ற, செம்மரம் கடத்தி வந்த இரண்டு கார்கள் டிப்பர் லாரி மீது மோதித் தீப்பிடித்ததில் காரில் இருந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக ததகவல் வெளியாகியுள்ளது.

கடப்பா - தாடிபத்திரி சாலையில் செம்மரம் வெட்டிக் கடத்திவந்த இரண்டு கார்களைப் பிடிக்கக் காவல்துறையினர் வாகனத்தில் விரட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிவேகமாகச் சென்ற கார்கள் முன்னே சென்ற டிப்பர் லாரியின் மீது மோதியதில், லாரியின் டேங்க் உடைந்து டீசல் சிந்தியதில் மூன்று வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன.

தகவல் அறிந்த தீயணைப்புத் . தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

விபத்தில் காரில் வந்த செம்மரக் கடத்தல்காரர்கள் 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட 3 பேருக்குக் கடப்பா அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிரிழந்த 4 பேரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments