கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் வடிகால் அமைப்பது குறித்து ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

0 576
கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் வடிகால் அமைப்பது குறித்து ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் வடிகால் அமைப்பது குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து  தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப் பாயம் உத்தரவிட்டு உள்ளது. 

சென்னை மாநகராட்சியின் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் வசதி அமைக்கும் திட்டத்தை எதிர்த்து சஜித் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், திட்டம் குறித்து ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை, தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம்,  தேசிய கடல் வளர் ஆராய்ச்சி  நிறுவனம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரியம்,பொதுப்பணித்துறை  ஆகியோர் கொண்ட குழுவை நியமித்தது. 

ஆய்வு செய்து டிசம்பர் 4ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments