சீனாவுக்கு எதிராக நாடுகளை ஓரணியில் திரட்டும் அமெரிக்கா

0 1134
சீனாவுக்கு எதிராக நாடுகளை ஓரணியில் திரட்டும் அமெரிக்கா

சீனாவுக்கு எதிராக இந்தியா, இலங்கை ,மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளை ஓரணியில் திரட்ட அமெரிக்கா முயற்சி மேற்கொண்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ இலங்கை, மாலத்தீவு நாடுகள் பயணம் மேற்கொண்டு இந்தியாவுக்கு வர இருக்கிறார்.

அக்டோபர் 26.27 தேதிகளில் அவர் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், ஜெய்சங்கர் உள்ளிட்டோரை சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது சீனாவின் ஆதிக்கத்தை கடல் மற்றும் எல்லைப் பகுதிகளில் இருந்து நீக்குவது குறித்து அவர் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மைக் பாம்பியோ ஆசியாவின் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments