மியான்மருக்கு சிந்துவிர் என்ற நீர்மூழ்கிக் கப்பலை வழங்குகிறது இந்தியா

0 1370
மியான்மருக்கு சிந்துவிர் என்ற நீர்மூழ்கிக் கப்பலை வழங்குகிறது இந்தியா

ஐஎன்எஸ் சிந்துவிர் என்ற நீர்மூழ்கி கப்பலை மியான்மருக்கு வழங்க இருப்பதாக, இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, பேசியுள்ள வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா , மியான்மரின் ராணுவத்தில் இதுவே முதலாவது நீர்மூழ்கி கப்பல் ஆகும் என்றார்.

அண்டை நாடான மியான்மருடன் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான முயற்சி இது' என அவர் தெரிவித்தார்.

அண்மையில், ராணுவத்தளபதி மனோஜ் நரவானே மேற்கொண்ட மியான்மர் சுற்றுப்பயணத்தின் போது, ராணுவ தளவாடங்களை வழங்க இந்தியா ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments