நீட் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு அக்.14ல் தேர்வு - உச்சநீதிமன்றம்

0 1429
நீட் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு அக்.14ல் தேர்வு - உச்சநீதிமன்றம்

நீட் நுழைவுத்தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு நாளை மறுநாள் தேர்வு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மருத்துவப்படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 13ம் தேதி நடைபெற்றது. இதில், கொரோனா பாதித்த மாணவர்களும், நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்த மாணவர்களும் பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டது.

இதனால், விண்ணப்பித்த 15 லட்சத்து 97 ஆயிரம் பேரில் 85 முதல் 90 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்வெழுதினர்.

இந்நிலையில், நாளை மறுநாள் தேர்வு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தேர்வு முடிவுகள் அக்டோபர் 16ம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments