52 கி.மீ தூரத்தை 27 நிமிடங்களில் கடந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்..விரைவாக சென்றும் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்த சோகம்..!

0 20080
கோவையில் உயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தையை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விரைவாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றும் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

கோவையில் உயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தையை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விரைவாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றும் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

அன்னூர் அருகே உள்ள தம்பதிக்கு பிறந்த 2 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு சிறுநீர் கழிப்பதில் சிக்கல் ஏற்பட்டு வயிறு வீங்கி அன்னூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. குழந்தையை பார்த்த மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு உடனே கொண்டு செல்ல அறிவுறுத்தினர்.

108 ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சிரஞ்சீவி குழந்தையை இலவசமாக கொண்டு செல்வதாக கூறினார். உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போக்குவரத்து சரிசெய்யப்பட்டதையடுத்து 52 கிலோ மீட்டரை 27 நிமிடத்தில் கடந்து குழந்தையை கோவை அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments