ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்ட சம்பவம் : மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்

0 2840
ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்ட சம்பவம் : மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்

சிதம்பரம் அருகே பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி, ஊராட்சி கூட்டத்தில் தரையில் அமர வைக்கப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நிகழ்ந்த சம்பவம், பொதுவாழ்வில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டுள்ள தலைகுனிவு எனக் குறிப்பிட்டு உள்ளார்.

10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தேர்தல் நடத்தப்படாமல் இருந்த பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி உள்ளிட்ட 4 ஊராட்சிகளுக்கு 2006- ஆம் ஆண்டு திமுக ஆட்சியில், தேர்தல் நடத்தப்பட்டதை மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டி உள்ளார்.

ஆகவே, இனி எந்த ஒரு ஊராட்சியிலும் இதுபோன்ற அவமரியாதை நடக்கக்கூடாது என மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments