நான்கு குழந்தைகள் இருந்தும் நாங்கள் அனாதை! ' சொத்தை இழந்து கலங்கி நிற்கும் வயதான தம்பதி

0 7878

ஓமலூர் அருகே வயதான தம்பதியினரிடத்தில் இருந்து சொத்தை பறித்து கொண்டு வீட்டை விட்டு மகன்களே வெளியேற்றி விட்டதால் ஆதரவற்ற நிலையில் அவர்கள் தெரு தெருவாக சுற்றும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம், ஓமலூரையடுத்த மூக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட கோட்டங்கள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் முனியன் - ரஞ்சிதம் தம்பதி. இவர்களுக்கு 2 மகன் 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இந்த தம்பதி தங்களுக்கு சொந்தமான 70 சென்ட் நிலத்தை பிள்ளைகளுக்கு பிரித்து எழுதி கொடுத்து விட்டனர். வயதான காலத்தில் தங்களின் நிலை குறித்து அந்த தம்பதி யோசித்து பார்க்கவில்லை. பிறகு, இளைய மகன் நிலத்தில் தொகுப்பு வீடு கட்டி அதில் வசித்து வந்தனர். இந்நிலையில் , மூத்த மகன் ரத்தினவேல் அடித்து  துன்புறுத்திய காரணத்தினால், இந்த வயதான தம்பதி வீட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பல்வேறு இடங்களில் சென்று தங்கியிருந்த நிலையில், கொரோனா பரவல் முதியவர்களை அச்சுறுத்தியது.

இதையடுத்து கோட்டங்கள்ளூர் திரும்பி தங்களுக்கு சொந்தமான வீட்டிலேயே மீண்டும் தங்கியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த இந்த தம்பதியின் மூத்த மகன் ரத்தினதேவல் மீண்டும் அங்கு வந்து பெற்றோரிடத்தில் தகராறு செய்து  அடித்து வீட்டை விட்டு துரத்தியுள்ளார். வேறு வழியில்லாமல் வீட்டை விட்டு வெளியேறி வயதான தம்பதி ஓமலூர் காவல் துணை கண்காணிப்பாளரிடம் தங்களுடைய வீட்டை மீட்டு தரும்படியும், தங்கள் உயிரை காப்பாற்ற வேண்டியும் கண்ணீர் மல்க புகார் அளித்தனளர். உடனடியாக, டி.எஸ்பி  விசாரணை செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

வயதான காலத்தில்  பெற்றோர்களை பிள்ளைகள் பாதுகாக்கவில்லை என்றாலும் பரவாயில்லை  குறைந்தபட்சம் அவர்களை துன்புறுத்தாமல்வது இருங்கள் என்று போலீஸார் எச்சசரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments