கர்நாடகத்தில் விவசாயிகள் போராட்டத்தால் மக்கள் இயல்பு வாழ்க்கை முடக்கம்

0 611
கர்நாடகத்தில் விவசாயிகள் நடத்தும் முழு அடைப்புப் போராட்டத்தில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

கர்நாடகத்தில் விவசாயிகள் நடத்தும் முழு அடைப்புப் போராட்டத்தில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

கலபுரகி உள்ளிட்ட நகரங்களில் குறைந்த அளவில் மக்கள் நடமாட்டம் காணப்படுகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்ட போதும் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் சார்பில் பேரணி ஆர்ப்பாட்டம் போன்றவற்றை நடத்தப்படுகின்றன.

மத்திய-மாநில அரசுகளின் 5 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் இன்று போராட்டம் நடத்துகின்றனர். விளை நிலங்களை வாங்குவதற்கான தடைகளை நீக்கி இரண்டு சட்டங்களை கர்நாடக அரசு நிறைவேற்றியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments