கில்ஜிஸ்தான்-பல்திஸ்தான் பகுதியை தனது ஐந்தாவது மாகாணமாக அறிவிக்க பாகிஸ்தானுக்கு உரிமை கிடையாது -இந்தியா

0 5343
கில்ஜிஸ்தான்-பல்திஸ்தான் பகுதியை தனது ஐந்தாவது மாகாணமாக அறிவிக்க பாகிஸ்தானுக்கு எந்த விதமான சட்டரீதியான உரிமையும் கிடையாது என்று இந்தியா தெரிவித்துள்ளது.

கில்ஜிஸ்தான்-பல்திஸ்தான் பகுதியை தனது ஐந்தாவது மாகாணமாக அறிவிக்க பாகிஸ்தானுக்கு எந்த விதமான சட்டரீதியான உரிமையும் கிடையாது என்று இந்தியா தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியை வெற்றிடமாகக் கருத வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.இப்பகுதியில் நவம்பர் 15ம் தேதி தேர்தல் நடத்த உள்ளதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

இப்பிரச்சினை தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாத்சவா, பாகிஸ்தான் கில்ஜித்-பல்திஸ்தான் என்ற அழைக்கப்படும் பகுதி மீது எந்த சட்ட உரிமையையும் கோர முடியாது என்று தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்றும் இதன் விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments