மகாராஷ்டிராவில் கட்டிட விபத்தில், இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருந்த நபர் 28 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்பு

0 510
மகாராஷ்டிராவில் கட்டிட விபத்தில், இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருந்த நபர் 28 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்பு

மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டியில் கட்டிடம் விபத்தில், இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருந்த நபர் 28 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்டார்.

அங்கு 36 ஆண்டு பழமையான 3 மாடிக் கட்டிடம் மேலிருந்து இடிந்து விழுந்ததில், அங்கு வசித்து வந்த 62 பேர் இடிபாடுகளில் சிக்கினர்.

இதில், 2 வயது முதல் 12 வயதுள்ள 8 சிறார்கள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். 26 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டனர்.

28 மணி நேரம் கழித்து கட்டிட இடிபாடுகளில் இருந்து ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இடிந்து விழக்கூடிய அபாயத்தில் கட்டிடம் இருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாகக் கூறி, பிவாண்டி மாநகராட்சி துணை ஆணையர் மற்றும் இளநிலைப் பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments