ஸ்ரீநகர்-கார்கில் லே சாலையை இந்த குளிர்காலத்தில் 95 நாட்களுக்கு பதில் 45 நாட்கள் மட்டுமே மூட எல்லை சாலை அமைப்பு முடிவு

0 516
ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த சாலையை 45 நாட்கள் மட்டும் மூட முடிவு

கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்திய ராணுவ வாகனங்களுக்கான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் வகையில், ஸ்ரீநகர்-கார்கில் லே சாலையை இந்த குளிர்காலத்தில் 95 நாட்களுக்கு பதில் 45 நாட்கள் மட்டுமே மூட, முடிவு செய்துள்ளது.

அத்துடன் டிபிஓ எனப்படும் தர்பூக் தவுலத் பேக் ஓல்டி  சாலயில் உள்ள எல்லா பாலங்களையும் வலுப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது.

தார்ச்சா-நிமு லே சாலையில் வரும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் தொடர்ந்து பனிக்கட்டிகளை அகற்றப்பட உள்ளது. இதனால் 24 மணி நேரமும் அந்த சாலை வழியாக ராணுவ சப்ளையை நடத்தமுடியும்.

Shinku La- Darcha-Padam பிரிவில் நீளம் குறைந்த சுரங்கப்பாதையை அமைத்து அதன் மூலம் ஆண்டு முழுவதும் பனிக்கட்டி பிரச்சனை இன்றி ராணுவ போக்குவரத்தை நடத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments